தேவையானவை: ஸ்வீட் கார்ன் முத்துக்கள் - ஒரு கப், வெங்காயம், - ஒன்று, தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 2 , கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு, மல்லித்தூள் (தனியாத்தூள்), சீரகத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து... கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் ஸ்வீட் கார்ன், தனியாத்தூள், சீரகத்தூள், உப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு வதக்கி, அரை கப் நீர் சேர்த்து மூடி, மிதமான தீயில் வேகவிடவும். பிறகு, கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.
No comments:
Post a Comment