தேவையானவை: துவரம்பருப்பு - ஒரு கப், சின்ன வெங்காயம் - 10 (தோல் உரிக்கவும்), தக்காளி - 2 (நறுக்கவும்), மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்), மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், பூண்டு - 4 பல் (நசுக்கவும்), கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: துவரம்பருப்பு, சின்ன வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், பச்சை மிளகாய் ஆகியவற்றை குக்கரில் சேர்த்து நன்கு வேகவிட்டு மசித்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கலக்கவும். மிளகு, சீரகத்தைப் பொடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். அதில் பருப்புக் கலவை, நசுக்கிய பூண்டு, மிளகு - சீரகப் பொடி, உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும்.
No comments:
Post a Comment