தேவையானவை: கேழ்வரகு மாவு - 2 கப், சிவப்பு பூசணி துருவல் - ஒரு கப், தேங்காய்த் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - சிறு துண்டு (தோல் சீவவும்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சிவப்பு பூசணி துருவல், தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு லேசாக தண்ணீர் தெளித்து நைஸாக அரைக்கவும். கேழ்வரகு மாவுடன் அரைத்த சிவப்பு பூசணி விழுது, உப்பு, 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, தேவையான நீர் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ளவும். தோசைக்கல்லை காயவைத்து, மாவை சற்று கனமான தோசையாக ஊற்றி, சுற்றிலும் எண் ணெய் விட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.
No comments:
Post a Comment