Monday, August 3, 2015

டொமேட்டோ ரைஸ்


தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், தக்காளிச் சாறு - ஒரு கப், வெங்காயம், பச்சை மிளகாய் - தலா ஒன்று, பூண்டு - 4 பல் (நறுக்கிக்கொள்ளவும்), பட்டை - சிறு துண்டு, லவங்கம், ஏலக்காய் - தலா ஒன்று, பொடியாக நறுக்கிய கொத்த மல்லித்தழை - சிறிதளவு, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பாசுமதி அரிசியை 10 நிமிடம் நீரில் ஊறவிட்டு, நீரை வடிக்கவும். வெங்காயம், பச்சை மிள காயை நீளநீளமாக மெல்லியதாக நறுக்கவும்.  குக்கரில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து... வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் தக்காளிச் சாறு, மிளகாய்த்தூள், சிறிதளவு உப்பு, முக்கால் கப் நீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு, பாசுமதி அரிசியை சேர்த்துக் கிளறி, குக்கரை மூடி வேகவிடவும். ஒரு விசில் வந்ததும் அடுப்பை ‘சிம்’மில் வைத்து 5 நிமிடத்துக்குப் பிறகு இறக்கி, கொத்தமல்லித்தழை சேர்த்துப் பரிமாறவும்.

No comments:

Post a Comment