Monday, August 3, 2015

ராகி கார அடை


தேவையானவை:  கேழ்வரகு மாவு - 2 கப், முருங்கைக்கீரை (உருவியது) - அரை கப், பச்சரிசி மாவு - கால் கப், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - கால் கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கேழ்வரகு மாவு, பச்சரிசி மாவை ஒன்று சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து... நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், முருங்கைக்கீரை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். இதை மாவில் போட்டு... தேவையான உப்பு, வெதுவெதுப்பான நீர் சேர்த்துப் பிசைந்து, தவாவில் சற்று கனமான அடைகளாகத் தட்டி, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

No comments:

Post a Comment