Monday, August 3, 2015

சுண்டைக்காய் குழம்பு


தேவையானவை: பச்சை சுண்டைக்காய்,  சின்ன வெங்காயம் - தலா 10, கீறிய பச்சை மிளகாய் - 2, கடுகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன், புளி - சிறிய எலுமிச்சை அளவு, மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், தக்காளி - 2, வேகவைத்து, மசித்த துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பச்சை சுண்டைக்காயை ஒன்றிரண்டாக நசுக்கி, தயிரில் அரை மணி நேரம் ஊறவைக்கவும். சின்ன வெங்காயத்தை தோல் உரிக்கவும். புளியை கெட்டியாகக் கரைத்துக்கொள்ளவும். தக்காளியை மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைக்கவும். வாணலி அல்லது மண்சட்டியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, சீரகம், பெருங்காயத்தூள் தாளித்து... வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாயைப் போட்டு வதக்கி, ஊறவைத்த சுண்டைக்காயை தயிர் நீக்கி சேர்த்து... மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறவும். பிறகு, அரைத்த தக்காளி விழுது, தேவையான உப்பு சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் புளிக்கரைசல், வேகவைத்து மசித்த துவரம்பருப்பு சேர்த்து, நன்றாக கொதி வந்த பின் கொத்தமல்லித்தழை தூவி, இறக்கிப் பரிமாறவும்.

No comments:

Post a Comment