தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், தேன் - 3 டேபிள்ஸ்பூன், வறுத்த கறுப்பு எள் - 2 டீஸ்பூன், நெய் - 4 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: கோதுமை மாவுடன் தேன், 2 டேபிள்ஸ்பூன் நெய், எள், சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கலந்து, தேவையான நீர் சேர்த்து நன்கு பிசையவும். மீதமுள்ள நெய்யை எண்ணெயுடன் கலக்கவும். பிசைந்த மாவை சப்பாத்திகளாக திரட்டி, தோசைக்கல்லில் போட்டு நெய் - எண்ணெய் கலவையை விட்டு சுட்டு எடுக்கவும்.
No comments:
Post a Comment