Monday, August 3, 2015

சீரக ரசம்


தேவையானவை: பருப்புத் தண்ணீர் - 2 கப், நீர்க்க கரைத்த புளித் தண்ணீர் - ஒரு கப், தக்காளி - 3, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,  கொத்தமல்லித்தழை - சிறிதளவு, சீரகம் - இரண்டரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, பூண்டுப் பல் - 3 (நசுக்கிக்கொள்ளவும்), கடுகு, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
 
செய்முறை: சீரகம், கறிவேப்பிலையை மையாக அரைக்கவும். தக்காளியை மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைக்கவும். பருப்புத் தண்ணீருடன் அரைத்த சீரக விழுது, தக்காளி விழுது, நசுக்கிய பூண்டு, மஞ்சள்தூள், உப்பு, புளித் தண்ணீர் சேர்த்துக் கரைத்துக்கொள்ளவும். வாணலி யில் நெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, வெந்தயம், இரண்டாக கிள்ளிய காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து... பருப்புக் கலவையை சேர்த்து, நுரைத்து கொதி வரும் சமயத் தில் இறக்கி, கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறவும்.

No comments:

Post a Comment