தேவையானவை: புளிக்காத கெட்டித்தயிர் - ஒரு கப், பொட்டுக்கடலை மாவு - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கடுகு, மிளகு - தலா கால் டீஸ்பூன், கொத்த மல்லித்தழை - சிறிதளவு, கீறிய பச்சை மிளகாய் - 2, எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தயிரை நன்கு கடைந்து மஞ்சள்தூள், உப்பு, பெருங்காயத்தூள், பொட்டுக் கடலை மாவு சேர்த்து, கொஞ்சம் நீர் விட்டுக் கரைக்கவும். வாணலி யில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, மிளகு, கீறிய பச்சை மிளகாய் தாளித்து, மோர்க்கரைசலை ஊற்றி, 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி, உடனடியாக வேறு பாத்திரத்துக்கு மாற்றி, கொத்தமல்லித்தழைத் தூவிப் பரிமாறவும்.
No comments:
Post a Comment