தேவையானவை: பூண்டு - 20 பல், சின்ன வெங்காயம் - 10, நாட்டுத் தக்காளி - 3, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒன்றரை டீஸ்பூன், ஒன்றிரண்டாக பொடித்த மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், புளி - ஒரு எலுமிச்சைப் பழம் அளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, வெந்தயம் - அரை டீஸ்பூன், வெல்லத்தூள் - சிறிதளவு, நல்லெண்ணெய், உப்பு -
தேவையான அளவு.
தேவையான அளவு.
செய்முறை: பூண்டு, சின்ன வெங் காயத்தை தோல் உரிக்கவும். தக் காளியை மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைக்கவும். புளியை கெட்டியாக கரைத்து வைக்கவும். வாணலி அல்லது மண்சட்டியில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், கறி வேப்பிலை, வெந்தயம் தாளித்து, பூண்டைப் போட்டு வதக்கவும். பிறகு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி, ஒன்றிரண்டாக அரைத்த தக்காளி, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதோடு மஞ்சள்தூள், மிள காய்த்தூள், மிளகுத்தூள், மல்லித்தூள் சேர்த்துக் கிளறி, புளிக் கரைசல், உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். குழம்பு கெட்டி யானதும் வெல்லத்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
No comments:
Post a Comment