Monday, August 3, 2015

மோர் ரசம்


தேவையானவை: மோர் - 2 கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, கடுகு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, உப்பு - தேவையான அளவு.
வறுத்துப் பொடிக்க: தனியா - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், வெந்தயம், மிளகு - தலா கால் டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3.
செய்முறை: வறுத்துப் பொடிக்க கொடுத்துள்ளவற்றை வெறும் வாணலியில் வறுத்து, மிக்ஸியில் பொடிக்கவும். மோருடன் மஞ்சள்தூள், கறிவேப் பிலை, பெருங்காயத்தூள், ஒரு கப் நீர், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, மோர் கரை சலை ஊற்றி நுரைத்து வரும் சமயம் வறுத்துப் பொடித்த பொடி சேர்த்துக் கலந்து, கொத்த மல்லித்தழை சேர்த்து இறக்கவும்.

No comments:

Post a Comment