Monday, August 3, 2015

சுரைக்காய் பால் கூட்டு


தேவையானவை: மீடியம் சைஸ் சுரைக்காய் - ஒன்று, பெரிய வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 3, வேகவைத்த பாசிப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், பால் - ஒரு கப், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சுரைக்காயை மிகவும் பொடியாக நறுக்கவும். பச்சை மிள காயை கீறிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கி, சுரைக்காயை சேர்த்து மேலும் வதக்கவும். வேகவைத்த பாசிப்பருப்பை இதனுடன்  சேர்த்து தீயைக் குறைத்து, வாணலியை மூடி வைக்கவும். காய் நன்கு வெந்ததும் பால் சேர்த்து கொதிக்க விட்டு, கெட்டியாக சேர்ந்தாற்போல் வரும்போது நன்கு கிளறி இறக்கவும்.

No comments:

Post a Comment